● ரா. சண்முகநாதன், மயிலாப்பூர்.

எனக்கு உத்தியோக மாறுதல், நிரந்தர வேலை எப்போது அமையும்? அரசுத் தேர்வு எழுதியுள்ளேன். தனியார் கல்லூரி அல்லது அரசு வேலை அமையுமா? அல்லது வெளிநாடு போகலாமா?

Advertisment

32 வயது நடக்கிறது. திருவோண நட்சத் திரம், மகர ராசி, மேஷ லக்னம். 2020 வரை ஏழரைச்சனியில் விரயச்சனி. அதுவே உங்களுக்கு நிரந்தர வேலையையும், முன்னேற்றம், திருப்தியான வருமானத்தை யும் தடுக்கிறது. மேலும் குரு தசை 2029 வரை. குரு 12-ல் மீனத்தில் மறைவு, ஆட்சி. ராகு சம்பந்தம். எனவே அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் பணி அமையலாம். சென்னை ஆவடி சாலையில் திருவலிதாயம் சென்று (பாடி) வல்லீஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக பூஜை செய்யவும். ஞானசம்பந்த குருக்கள், தொலைபேசி: 044-26540706-ல் பேசி ஏற்பாடு செய்யவும்.

● வி. சீனிவாசன், சென்னை.

சதய நட்சத்திரம், கும்ப ராசி. பிறந்த திலிருந்தே கஷ்டம்தான். எப்பொழுது முன்னேற்றம் ஏற்படும்? திருமணமாகி விவாகரத்தாகிவிட்டது. மறுமணம் எப்போது நடக்கும்?

உங்கள் ஜனன ஜாதகமும், தசாபுக்தி இருப்பும் (ராகு தசை இருப்பு) அனுப்பவும். விவரம் அனுப்பாமல் வெறுமனே கேள்வி கேட்டால் பதில் தரமுடியாது.

● எஸ். ராஜலட்சுமி, வேளச்சேரி.

Advertisment

தாங்கள் முதிர்ந்த பழம். தாய்மை, சாந்தம், பெருந்தன்மை உடையவர் என்பதால், உங்களை வாழ்த்துவதைவிட வணங்குகிறேன். சூரியன் உதிக்கும் வரை- கடல் அலைகள் கரையைத் தொடும்வரை- நிலவும் நட்சத்திரங்களும் இருக் கும்வரை வாழவேண்டும்; எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஈரோட்டைப் பொருத்தவரை திருக் கணித ஜாதகமே கணித்துத் தருகிறார்கள். அதனால் மதுரை கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி கணிக்க வேண்டுமா? எனக்கு தைராய்டு பிரச்சினை உள்ளது. இது அதிகமாகி, இரு விழிகளை மூட முடியவில்லை. அதனால் சங்கரா நேத்ராலயாவில் கண் சிகிச்சை (கதிர்வீச்சு) பத்து நாட்கள் தொடர்ந்து எடுத்தபிறகு கண் அசைக்க முடிகிறது. முழுமையாக எப்போது குணமாகும்? எதிர்காலத்தில் இதனால் சைடு எபெக்ட் (பக்க விளைவு) எதுவும் வருமா?

உங்களுக்கு 58 வயது நடக்கிறது. அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னம். குரு லக்னத்தில் ஆட்சி! அவருடன் ஆயுள் காரகன் சனி சம்பந்தம். நீங்கள் அனுப்பிய ஜாதகம் திருக்கணிதம். கே.எம். சுந்தரம் வசம் வாக்கியப்படி கணித்து எழுதவும். (தொடர் புக்கு, செல்: 92453 28178). அப்படியே மகள் தாமரை ஜாதகத்தையும் வாக்கியப்படி கணித்து எனக்கு ஜெராக்ஸ் காப்பி அனுப்ப வும். தெளிவாக பதில் சொல்ல வாக்கிய ஜாதகமே அவசியம்!

● வி. அருண், ஈரோடு.

எனக்கு 36 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்?

அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னம். 2-ல் செவ் வாய் நின்று 9-ல் உள்ள சனியைப் பார்ப்பது தோஷம். நடப்பு குரு தசை, சுக்கிர புக்தி. ஏற்கெனவே சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்ததே போதும். 21-3-2019-ல் சுக்கிர புக்தி முடிந்து, சூரிய புக்தி ஆரம்பம். அதில் திருமணம் நடைபெறும். கோவையில் ஹோட்டல் தொழில் செய்யலாம். 10-க்குடையவரும், 2-க்குடையவரும் பரிவர்த்தனை யோகம். அக்னி சம்பந்தமான தொழில் லாபம் தரும். ஹோட்டல், டீக்கடை போன்றவை.

● எம். சாவித்திரி, குரோம்பேட்டை.

Advertisment

எனது மகளுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும்?

மீனாட்சிக்கு அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னம். பெண் ஜாதகத்தில் 5-ஆம் இடம் கர்ப்ப ஸ்தானம். 9-ஆம் இடம் (5-க்கு 5-ஆம் இடம்) புத்திர ஸ்தானம். 5-க்குடைய சூரியன் 6-ல் மறைவு. 9-ல் செவ்வாய், குரு. செவ்வாய் ராசிநாதன், லக்னநாதன். குரு 9-க்குடையவர்- புத்திரகாரகர் ஆட்சி. எனவே தோஷமில்லை. மாப்பிள்ளை சசிதரன் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னம். 5-ல் சூரியன், புதன், சுக்கிரன், குரு, சனி. சூரியன் நீசம் என்றாலும் சுக்கிரன் ஆட்சி. சனி உச்சம் என்பதால் சூரியன் நீசபங்கம் அடைவார். எனவே இவர் ஜாதகத்திலும் புத்திர தோஷமில்லை. ஆனால் மீனாட்சி- சசிதரன் திருமணம் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் நடந்திருந்தால், வாரிசு கிடைப்பதில் தோஷம் உண்டாகலாம். அப்படியிருந்தால் மேற்கண்ட தேதிகளில் நடந்த திருமணத்தன்று கட்டிய திருமாங் கல்யத்தை மாற்றி 1, 3, 6 வரும் தேதிகளில் மாற்று மாங்கல்யம் அணிவிக்க வேண்டும். அத்துடன் எளிய பரிகாரமாக கும்பகோணம் (குடவாசல் வழி) சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேக பூஜைசெய்து வேண்டிக்கொள்ளலாம். வசதியிருந்தால் சந்தான கோபால கிருஷ்ண ஹோமம், சந்தான பரமேஸ்வர ஹோமம், சந்தான கணபதி ஹோமம் செய்து தம்பதிகள் இருவரும் கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம்.

kuberer

● பி. கார்த்திகேயன், ஆழ்வார்திருநகர்.

உங்களுடைய அசத்தலான கணிப்பு களுக்காகவே தவறாமல் "பால ஜோதிடம்' வாங்கிப் படிக்கிறேன். நீங்கள் கூறியபடி திருவக்கரை கோவிலுக்குச் சென்றுவந்த பின்பு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என்ன தொழில் செய்யலாம்? குருட்டு அதிர்ஷ்டம் எந்த தசை, எந்த புக்தியில் கிடைக்கும்?

மிதுன லக்னம், மிதுன ராசி, புனர்பூச நட்சத்திரம். 16-12-2018 முதல் புதன் தசை, சனி புக்தி நடப்பு. தசாநாதன் புதன் மகரத்தில். புக்திநாதன் சனி மிதுனத்தில். இருவரும் 6 ஷ் 8 சஷ்டாஷ்டகமாக இருந்தாலும், பரிவர்த் தனை. ஆயுள், ஆரோக்கியம் பாதிப்பில்லை. சனி 8-க்குடையவர். படிப்படியாக உடல் நலம் முன்னேறும். குருட்டு அதிர்ஷ்டமும், திருட்டு யோகமும் வந்தாலும் நிலைக் காது. வந்தமாதிரியே போய்விடும். உழைத்துச் சம்பாதிக்கும் சேமிப்பே உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பயன்படும். எனவே கற்பனைக்கனவில் கையிலுள்ள இருப்பையும் இழந்துவிடாதீர்கள். (கண்ணாடிக்கடைக்காரர் மாதிரி). வண்டியில் கண்ணாடி ஜாடிப்பொருட்கள் விற்பவர் கனவில் மனைவியை எட்டி உதைப்பது மாதிரி கனவு கண்டு, நிஜமாகவே வண்டியை எட்டி உதைத்தார். எல்லாப் பொருட்களும் உடைந்து நாசமாகி விட்டதாம். ஆக, நினைப்பு பிழைப்பைக் கெடுத்துவிட்டது.

● து. செல்வராஜு, விழுப்புரம்.

தங்களது ஆன்மிகம், ஜோதிடத்தொண்டு வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், வழிகாட்டியாகவும் உள்ளது. வாழ்த்துகள்! பாராட்டுகள்! ஒருசில பஞ்சாங்கத்தில் யோகங்களில் "பிரபலாரிஷ்ட யோகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக ஞாயிறு- பரணி, திங்கள்- சித்திரை, செவ்வாய்- உத்திராடம், புதன்- அவிட்டம், வியாழன்- கேட்டை, வெள்ளி- பூராடம், சனி- ரேவதி. மேற்கண்ட கிழமை, நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமா? திதிகளின் விஷ சூன்ய ராசிகள் என்பதற்கும் விளக்கம் தேவை!

அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், வர்ஜயோகம், நாச யோகம், தக்த யோகம், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் என்று எட்டு யோகம் உண்டு. இதில் அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம் என்ற மூன்றுமே நல்ல யோகம். மற்றவை கெடுதல். நீங்கள் குறிப்பிட்டபடி சில கிழமைகளில், சில நட்சத்திரம் வந்தால் பிரபலாரிஷ்ட யோகம். இம்மாதிரி காலங்களில் திருமணம், கிரகப்பிரவேசம், தொழில் துவங்குதல் போன்ற நல்ல காரியங்களைத் தவிர்க்கவேண்டும. இதையெல்லாம் யார் கடைப்பிடிக்கிறார்கள்? கிழமைகளில் 27 நட்சத்திரம் சேரும் காலம் மேற்கண்ட யோகங்கள் உண்டாகும். இதேபோல ஏழு கிழமைகளிலும் குறிப்பிட்ட திதி சேர்வதும் அசுபயோகம். இவற்றையும் யாரும் அனுஷ்டிப்பதில்லை. காலண்டரில் சுபமுகூர்த்தம் என்று போட்டிருந்தாலும், மண்டபம் காலியாக இருந்தாலும், செவ்வாய்- சனிக்கிழமை தவிர எல்லா நாட்களிலும் விசேஷம் வைத்துவிடுகிறார்கள். இவற்றைக் காட்டிலும் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. ஆங்கிலத் தேதிப்படி 8 அறவே கூடாது. அடுத்து 4-ம், 7-ம் தவிர்க்கப்பட வேண்டும். எல்லா சுபயோகம் இருந்தாலும், தேதி எண் அல்லது கூட்டு எண் 8 வரும் நாளில் திருமணம் வைத்தால், கண்டிப்பாக வாரிசு இருக்காது அல்லது தம்பதிகள் பிரிந்துவிடுவார்கள். கிரகப் பிரவேசமும் கூடாது.

● கே. மணி, எடப்பாடி.

என் மகன் கௌரிசங்கருக்கு திருமணம் எப்போது நடைபெறும்?

ஆவணி மாதம் 27 வயது முடியும். மகர ராசியில் சனி இருப்பதும், அவரை மிதுனச் செவ்வாய் பார்ப்பதும் களஸ்திர தோஷம்! ரிஷப லக்னத்துக்கு 2-ல் கேது, 8-ல் ராகு. நாக தோஷம். 30 வயதுக்குமேல் 35 வயதுவரை திருமணம் தாமதமாகலாம். காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்தால் 2019 அக்டோபருக்குமேல் புதன் புக்தியில் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும். காரைக்குடி சுந்தரம் குருக்களைத் தொடர்புகொள்ளவும். செல்: 99942 74067.

● ப்ரவீண், கோவை-38.

நான் இஞ்சினீயரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஏழரைச்சனியும், சனி தசையும் நடப்பதால் வாழ்வில் பல தடைகள், சோதனைகள். மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். சாத்தியமா? உணவு சம்பந்தமான தொழிலை சிறு அளவில் தொடங்க விரும்புகிறேன். அரசு உத்தியோகம் அமையுமா?

விருச்சிக ராசிக்கு 2020 வரை ஏழரைச்சனி நடக்கிறது. இது துடுப்பு இல்லாத படகு காற்றடித்த பக்கம் போவது போலத்தான் வாழ்க்கை ஓடும். எந்த திட்டமும் செயலும் நடக்காது. சனிப்பெயர்ச்சிவரை நாளைக் கடத்தவும். சொந்தத்தொழில் செய்தாலும் கடனாளியாகத்தான் இருப்பீர்கள். வேலைக்குப் போவது நல்லது.

● என். ஜெகதீசன், பொள்ளாச்சி.

என் தங்கை மகள் சுபாஷினிக்கு எப்போது திருமணம் நடக்கும்? எப்போது வேலை கிடைக்கும்? அரசு வேலை அமையுமா?

சுபாஷினி உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி. ஜென்மச்சனி, ராகு தசை நடப்பு. சிம்ம லக்னம். 7-ல் சனி. 27 வயது முடிந்தால்தான் திருமணம். சூரியன் நீசம். அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் பணி அமையலாம். அதுவும் தாமதமாகக் கிடைக்கும்.

● வி. கல்யாண சுந்தரம், சென்னை-110.

என் மகள்- மகன் இருவரின் எதிர்காலம், வேலை, திருமணம் பற்றி விளக்கவும்.

மகள் காயத்திரி மகர ராசி, மிதுன லக்னம். நாகதோஷம். ஏழரைச்சனி, ராகு தசை நடப்பு. 30 வயது பிறக்க வேண்டும். (திருமணத்துக்கு). மகன்- யுவராஜ் விருச்சிக ராசி, கும்ப லக்னம். 2020 வரை அவருக்கும் ஏழரைச்சனி. குட்டிச்சுக்கிர தசை. தங்கையின் திருமணத்துக்குப் பிறகு இவர் திருமணம் நடக்கும். பிள்ளைகளின் இரு ஏழரைச்சனியும் உங்களை பாதிக்கும். ஆயுள் குற்றமில்லை. ஆரோக்கியக் குறைவு, பொருளாதார நெருக்கடி, வைத்திய செலவு, தொழில் மந்தம் ஏற்படலாம். சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் மிளகு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். (சனிப்பெயர்ச்சிவரை- 2020)